44 வயது நடிகை
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபு. இவர் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை பவித்ரா லோகேஷ் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.
மேலும் இருவரும் லிப்கிஸ் கொடுத்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்களது உறவை பகிரங்கப்படுத்தினர்.
ஏற்கனவே மூன்று திருமணம் செய்த நரேஷ் பாபுவை 2 முறை விவாகரத்து செய்த பவித்ரா திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. திருமணம் முடிந்த சில நாட்களில் இருவரும் துபாய்க்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.
புகைப்படம்
இந்நிலையில், நடிகை பவித்ராவின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் ஒரு தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது, நடிகை பவித்ரா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர் என்பதால் அதற்காக எதையும் செய்துவிடுவார்.
அப்படி மிகப்பெரிய பிளானை போட்ட பவித்ரா, நரேஷ் பாபுவின் 1500 கோடி சொத்தை அபரிக்கத்தான் அவரை திருமணம் செய்திருக்கிறார். பணத்துக்காக என்னை விவாகரத்து செய்த பவித்ராவை, நரேஷ் இன்னும் புரியவில்லை. என்றாவது நிச்சம் ஒரு நாள் இது தெரியவரும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.