லிஜோமோல் ஜோஸ்
மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ் முதன்முறையாக 2016ம் ஆண்டு மகேஷின்டே பிரதிகாரம் என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். 2019 ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்தின் மனைவியாக நடித்திருந்தார் லிஜோமோல் ஜோஸ். அக்கா, தம்பி
பாசத்தை பற்றி பேசும் இப்படத்தில் ஜிவி பிரகாஷின் அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவான தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி மற்றும் லிஜோமோல் ஜோஸ் என இரண்டு கதாநாயகிகள் நடித்தனர்.
அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு தமிழில் இவர் நடித்து வெளியான ஜெய் பீம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது இந்த திரைப்படத்தை இவர் மலைவாழ் மக்களாக நடித்திருந்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
வாயடைத்து போன ரசிகர்கள்
தற்போது தமிழில் அன்னபூரணி என்ற திரைப்படத்திலும் காதல் என்பது பொதுவுடமை என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஜெய் பீம் படத்தில் நடித்த செங்கேனியா இது என்று வாயடைத்துப் போயிருக்கின்றனர்.