பூஜா ஹெக்டே
கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் முதன்முதலில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
முதல் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இதன் பின்னும் திரைப்படங்கள் நடித்தார். மேலும் இப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. இதன் பிறகு விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இப்படத்திலும் இவர் நடிப்பு பெரிதும் பேசப்படவில்லை. இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் தமிழில் இருந்து தெலுங்கு மொழி சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறார் பூஜா ஹெக்டே.
வர்ணிக்கும் ரசிகர்கள்
சமீபத்தில் அவர் நடித்த படங்கள் படுதோல்வியை தழுவி ஏமாற்றியது. கிளாமர் உச்சம் தொட்டு போட்டோஷூட் செய்வது விழாக்களுக்கு கவர்ச்சி உடையில் செல்வதுமாக இருந்து வருகிறார். தற்போது அவரது 33வது பிறந்தநாளை மாலத்தீவிற்கு சென்று அங்குள்ள ரெசார்ட்டில் கொண்டாடி வந்துள்ளார். அங்கு சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரிய சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.