நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
லியோ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
லியோ திரைப்பட குழு விஜய் பிறந்தநாள் முதல் படத்திற்கான விளம்பரத்தை தொடங்கியது. நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு முதல் சிங்கிள் ‘நா ரெடி’ பாடலை வெளியிட்டது. பின்னர் படத்தில் முக்கிய கதாபாத்திரமான சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரது பிறந்தநாளுக்கு அவர்களது கதாபாத்திர போஸ்டர்களை வெளியிட்டது.
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ இசை வெளியிட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இசை வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்பட்ட நிலையில், லியோ படக்குழு இசை வெளியிட்டு விழாவிற்கு டிக்கெட் தேவை அதிகமானதால் நடத்த முடியவில்லை எனவும், இதில் அரசியல் காரணங்கள் எதுவுமில்லை எனவும் அறிக்கை வெளியிட்டது.
உச்சகட்ட வெறித்தனம்
உச்சகட்டமாக நடிகர் கமலஹாசன் ஒரு காட்சியில் தோன்றுவார் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்க இன்று அக்டோபர் 5-ம் தேதி மாலை 06:30 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், தற்போது வெறித்தனமான இந்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த ட்ரெய்லரின் வீடியோ இதோ