ராதிகா
மறைந்த பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவிமான நடிகை ராதிகா அவர்கள் 1978 ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு பின் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களில் திரைப்படங்ககளில் நடித்தார்.
நடிகை ராதிகா தனது நடிப்பு திறமையின் மூலம் ஒரு தேசிய விருது மற்றும் ஆறு ஃபிலிம் பேர் விருதுகள் மூன்று தமிழ் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் துணைத் தலைவராகவும் தொடர்கிறார். 70களில் இறுதியில் இருந்து 1980 வரை மிகப் பிரபலமான நடிகையாக சினிமாவில் இருந்து வருகிறார்.
மேலும் வெள்ளிதிரையிலிருந்து சின்னதிரையிலும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவர் நடித்த சித்தி சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமானதாகும். தற்போது அரசியலிலும், சினிமாவிலும் பிஸியாக உள்ளார்.
ராதிகா – கமல் ஹாசன்
மேலும், கமலுடன் சேர்ந்து சிறப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ராதிகா. நடிகர் கமலுடன் முத்த காட்சிக்கு எப்படி கொடுத்தார் என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் எந்த நடிகையும் விட்டு வைக்க மாட்டார். அனைவரிடமும் நடிக்கும் போது ரொமான்ஸில் பிச்சு உதறிவிடுவார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் கூட நடிக்கும் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டுதான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஏன் கழுதையை கொடுத்தால் கூட கழுதைகளிடமும் ரொமான்ஸ் செய்யும் நடிகன் கமல்ஹாசன். அதற்கு என்ன காரணம் என்றால் ரொமான்ஸ் காட்சிகள் தான் ரசிகர்களை பெரிய அளவு கவரும். அதன் காரணமாகவே திரைப்படத்தின் ஹைலைட்டாக இதை அவர் நினைத்து இருக்கிறார்.