செல்வராகவன்
தமிழ் திரைபட இயக்குநரான செல்வராகவன் முதன் முதலில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் எழுத்தாளராக அறியபட்டு பிரபலமானார். இதன்பின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.
இதன்படி,செல்வராகவன் இயக்கத்தில் 2005ஆம் வருடம் வெளியான தமிழ் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா அறிமுக கதாநாயகனாக நடித்த இந்த திரைபடத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் யுவன் இசையில் வெளியான பாடல் அனைத்துமே செம்ம ஹிட்டானது. 7ஜி ரெயின்போ காலனி படம் மற்றும் இப்படத்தின் பாடல்களின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பகுதியை செல்வராகவன் இயக்கவிருக்கிறார்.
ஓகே சொன்ன நடிகை
இதனிடையே, கடந்த 2013ம் ஆண்டு செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட நாட்களுக்கு பின்னர் ’ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படத்தைப் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குநர் செல்வராகவனின் ட்வீட்டுக்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார். ’நான் ரெடி’ என த்ரிஷா கொடுத்துள்ள பதில், தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.