நடிகை ரோஷினி
உலகநாயகன் என்றழைக்கப்படும் கமல்ஹாசனின் நடிப்பில் வந்த மிக முக்கியமான படம் குணா. வித்தியாசமான வேடத்தில் நடித்த கமலில் இப்படம், பலராலும் இன்னும் மறக்க முடியாத படமாவே இருக்கிறது.
1992ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ரேகா, ஜனகராஜ் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தான பாரதி இப்படத்தை இயக்கியிருந்தார்.இப்படத்தில் ரோஷினியும், கமல்ஹாசனும் தங்கியிருந்த குகைக்கு குணா குகை என்றே பெயரிட்டுள்ளனர்.
இன்னமும் அதனை குணா குகை என்று தான் அழைக்கிறார்களாம். ஒரு குகையில் வைத்து கண்மணி அன்போடு காதலன் பாடலை கூட பாடுவார் கமல். அப்போது ஆஷா குகையில் கமலுடன் இருப்பவர் தான் இந்த ரோஷினி.
இப்போ எங்க இருக்காரு?
இப்படத்தின் நடித்த நடிகை ரோஷினிக்கு இப்படம் கடைசி படமாகவே அமைந்துள்ளது. அழகும், நடிப்புத் திறமையும் இருந்தும் ரோஷினியால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை.
ஆனால், சிலர் படத்தில் நடித்தார் என்று, சிலர் அவர் திருமணமாகி செட்டிலானதாகவும் கூறி வருகின்றனர். மேலும் என்ன ஆனார் என தெரியாத நிலையில் இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.