பேரரசு
இளைய தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் மூலம், இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் பேரரசு. இந்த திரைப்படம் இவருக்கு மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனையும் படைத்தது.
தான் இயக்கும் திரைப்படங்களுக்கு பெரும்பாலம் ஊர்களின் பெயரை வைத்து அனைவரின் கவனத்தை கவர்ந்து. முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார் பேரரசு. திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற ஒரு சில படங்களே வெற்றி பெற்ற நிலையில், பின் இவர் எடுத்த படங்கள் இவருக்கு எதிர்பாத வெற்றியை கொடுக்கவில்லை.
தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சியிலாவது கௌரவ வேடத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக இவர் 2015 ஆம் ஆண்டு ‘ரூ’ என்கிற படத்தை எடுத்தார் அந்த படமும் ஒரு சில காரணத்தால் இதுவரை வெளிவராமல் உள்ளது.
பேரரசு மகள் யார் தெரியுமா?
இப்போது இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலருமே தன் வாரிசுகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள், அந்த வகையில் பல நடிகைகள் தான் தன் வாரிசுகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வருகிறார்கள்.
இப்படி பட்ட ஒரு நிலமையில் இயக்குனர் பேரரசுவின் மகள் விருத்திகாமின்மினி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது இவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பகிரப்பட்டு வருகிறது.