நடிகை மிர்னா மேனன்
2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகர் மோகன்லாலுடன் ’பிக் பிரதர்’ எனும் மலையாளப் படத்தில் முதல்முறையாக நடிகை மிர்ணாமேனன் அறிமுகம் ஆனார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த ’புர்கா’ எனும் திரைப்படத்தில் நஜ்மா எனும் கதாபாத்திரம் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் ’அனந்தம்’ எனும் இணைத்தொடரிலும் நடித்துள்ளார்.
கணவர் யார் தெரியுமா?
கடந்த 2016ல் வெளியான ‘பட்டதாரி’ என்ற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது சரவணன் விஜய் விஷால் என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன் மிர்னா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இவரை குறித்து பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. மிர்னா மேனன், நடிகர் அபி சரவணனை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.