Connect with us

அட.. ரொம்ப சின்ன பொண்ணு, இவுங்க கூட எப்படி.? மீனாவுடன் கைகோர்க்க அடம்பிடித்த அப்பா வயது நடிகர்.!

Untitled Project 2023 08 18T191349.588 1

சினிமா கிசுகிசு

அட.. ரொம்ப சின்ன பொண்ணு, இவுங்க கூட எப்படி.? மீனாவுடன் கைகோர்க்க அடம்பிடித்த அப்பா வயது நடிகர்.!

நடிகை மீனா

90’களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார்.

Meena2 1

சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா இடையில் மிகப்பெரிய ஒரு இழப்பை எதிர்கொண்டார். தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றினால் இழந்தார் நடிகை மீனா.

meena 2

இந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா மற்றும் நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் இன்னும் சிலர் அவருடைய மனதை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

Meena1 768x768 1

அடம்பிடித்த அப்பா வயது நடிகர்

இந்நிலையில் மீனா குறித்து பேசிய ராஜ்கிரண் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என் ராசாவின் மனசிலே என்ற படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கும்போது, ஒரு பத்திரிகையில் மீனாவின் போட்டோவை பார்த்தேன்.

meena 1

இதையடுத்து நான் கஸ்தூரி ராஜாவிடம் சென்று இந்த பொண்ணு படத்தின் கதாநாயகிக்கு பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன். அதற்கு கஸ்தூரி ராஜா சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா என்று சொன்னார். நான் அதற்கு, இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சோழையம்மா கதாபாத்திரத்திற்கு மீனா தான் சரியாக இருப்பார் என்று கூறினேன். கடைசியில் அந்த படத்தில் மீனா நடித்து மிக பெரிய வெற்றி பெற்றது என்று ராஜ்கிரண் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top