விநாயகன்
மலையாள திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக முன்னணி வேடங்களில் நடித்து பிரபலமானவர் விநாயகன். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது இவரின் தனி சிறப்பு என கூறலாம். மலையாளம் மட்டும் இன்றி தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடித்திருப்பார்.