நடிகர் ஜான் விஜய்
சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகளுக்கு எளிதில் மக்கள் மத்தியில் பிரபல்யம் கிடைத்து விடும். ஆனால் அதையும் தாண்டி மக்களிடையே பிரபலமாவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அந்த வகையில் வில்லன், காமெடி கலந்த வில்லன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து கேரக்டரிலும் வேற லெவலில் நடித்து மிரட்டியிருப்பவர் தான் பிரபல முன்னணி நடிகர் ஜான் விஜய்.
இவர் தனது திரைபயணத்தை ரேடியோ ஜக்கியாக ஆரம்பித்து அதன் பின்னர் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் தன்னை நடிகராக அடையாளபடுத்தி கொண்டவர். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் தனது முரட்டு தனமான நடிப்பால் நம்மை மிரள வைத்திருப்பார்.
அதேபோல் காமெடி என்றால் வேற லெவலில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார் அந்த வகையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தனது பாணியை மாற்றிகொண்டு அதில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
குடும்ப புகைப்படம்
சமீபத்தில் நடிகர் ஜான் விஜய் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவருடைய மனைவி பிரபல அரசியல்வாதியின் மகள் மாதவி இளங்கோவன் என்பவர். மேலும், அவரை காதலித்து தான் திரும ணம் செய்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் அவரது குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளபக்கத்தில் வெளியாகியுள்ளது.