பூனம் பாஜ்வா
கடந்த 2008 ஆம் வருடம் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம்வந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படத்திலும் நடித்த பூனம் பாஜ்வா, முதலில் காதல் படங்களில் மட்டும் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்தார். தெனாவட்டு படத்தில் கியூட்டாக நடித்த பூனம், பின்னாளில் திரை வாழ்க்கைக்கு இடைவெளிவிட்டு இருந்தார்.
கடந்த சில வருடத்திற்கு முன்னதாக வெளியான ரோமியோ ஜூலியட் படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்த பூனம் பாஜ்வா, ஆம்பள படத்தில் தொப்புளை காட்டி கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். அரண்மனை படத்திலும் நடித்துள்ளார்.
ஒருசில படங்களில் நாயகியாக நடித்த இவர் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். மேலும், பட வாய்ப்பை பெறுவதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வசித்துவருகிறார் பூனம் பாஜ்வா.
ஓப்பனாக பேசிய பூனம் பாஜ்வா
தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெள்ளந்தியான ஆண்கள் அதிகமுறை கேட்கும் ஒரு விஷயம் “என்னுடன் காஃபி சாப்பிட உங்களை அழைத்து செல்லலாமா..?” என்பது தான்.
ஆனால், அவர்கள் கேட்கும் முறை, கேட்கும் சூழ்நிலை, கேட்கும் தொணி.. இது தான் அவர்கள் நிஜமாக எதற்கு அழைக்கிறார்கள் என்று புரியும் என தன்னுடைய புன் முறுவலை உதிர்த்தபடி கூறியுள்ளார்.