நடித்த சுரேகா
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி. அதனைத் தொடர்ந்து அவர் தெய்வத்திருமகள் படத்தில் எம். எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள சுரேகா வாணியின் கணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சுரேகா வாணி தமிழைவிட தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 42 வயதை கடந்த அவர் சினிமாவில் குடும்ப பாங்கான துணை கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார்.
வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் சுரேகா வாணி அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார். இவர் கடற்கரையில் சற்று கவர்ச்சியான ஆடையில் இருக்கும் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவரா இப்படி என்று வாய் பிளந்துள்ளனர்.