மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் முதன்முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
இருந்தபோதிலும் இப்படத்தினை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார்.
மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மாளவிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் பிரபலம்
இந்நிலையில் மாளவிகா தனது பிறந்த நாளை ஆண் நண்பர்களுடன் கொண்டாடினர். அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் மாளவிகா உடன் நெருக்கமாக இருக்கும் அந்த நபர் அவரது காதலர் என்று சிலர் கூறிவந்தனர்.
ஆனால் உண்மையில் மாளவிகாவை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருப்பவரின் பெயர் அபினவ், இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. அபினவ் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளை பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.