அர்ச்சனா
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருந்தவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அவர் பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அர்ச்சனா தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அர்ச்சனாவின் மகள் சாரா. அவரும் தனது அம்மாவுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அர்ச்சனா மாகாபாவுடன் இணைந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
நடிகை அர்ச்சனா-வின் சொத்த மதிப்பு இவ்வளவா..?
தற்போது, ஜி தமிழ் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அதே வேலை, தற்போது சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றார். இந்தநிலையில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் 3 முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளனர். இந்த சொத்து மதிப்பு கடந்த 2022-ம் ஆண்டின் படி கொடுக்கப்பட்ட விவரம் ஆகும்.