நடிகை சங்கீதா
தமிழ் சினிமாவில் தற்போது பல மாஸ் திரைப்படங்களில் நடித்து உச்சநட்சத்திரமாக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய்க்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்து, அப்பொழுதே பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் பூவே உனக்காக. இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் மாபெரும் ஜாம்பவான்களான நாகேஷ், நம்பியார், விஜயகுமாரி, சுகுமாரி என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சங்கீதா நடித்திருந்தார். துறுதுறுவென, சேட்டைக்கார பெண்ணாக நடித்த அவர் இப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆரம்பகாலத்தில் சங்கீதா தன்னை விட வயது மிகவும் அதிகமான ஹீரோக்களுடனே ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 50 திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக 2003 ஆம் ஆண்டு மேரி ஆல்பர்ட் என்ற தமிழ் படத்தில் நடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காத சங்கீதா தற்போது தன்னுடைய கணவருடன் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், மேலும் இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
வைரலாகும் புகைப்படம்
இதையடுத்து சங்கீதா பூவே உனக்காக படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சங்கீதாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.