விஜய் மகன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் ஈடுபட முடிவெடுத்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தளபதி விஜயின் மகன் சஞ்சய் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை முடித்து இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். மேலும் இவர் குறும்படங்களை இயக்கி வருகிறார்.
விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்கவும் சில முன்னணி இயக்குனர்கள் முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது. சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா, பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இதற்காக விஜய்யை அணுகியதாகவும், அவர் சஞ்சயிடமே கேட்டு கொள்ளுங்கள். அவனுக்கே ஓகே என்றால் பண்ணுங்கள் என கூறி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தப் போகும் பிரபல இயக்குனர்
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யை தனது மகளுக்கு ஜோடியாக படத்தில் நடிக்க வைக்க ஆசை என நடிகை தேவயானியின் கணவரும், பிரபல இயக்குனருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.மகள் இனியா என்பவர் சமீபத்தில் தான் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இப்படியொரு நிலையில் இயக்குனர் ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் கதையை தயார் செய்துள்ளாராம். இப்படத்தின் மூலம் தனது மகள் இனியாவை கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ள ராஜகுமாரன், கதாநாயகனாக விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.