Vj மகேஸ்வரி
தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் தான் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்து வருவார்கள். அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான பல ஆண்டு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் முதலில் விஜேவாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் 90’ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை நினைவில் வைத்திருக்கக் கூடிய விஜேக்களுள் ஒருவர் ஆனார். இப்படி பல தொலைக்காட்சிகளில் தனது திறமையை வெளிக்காட்டி வந்துகொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்துகண்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார் மேலும் தற்போது அவருக்கு ஒரு மகன் இருந்து வருகிறார்.
இவருடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்று பிரிந்தது. தற்போது மகேஸ்வரி ஒரு சிங்கள் மதராக இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொண்டார். அங்கு அவர் மனதில் பட்டதை தைரியமாக பேசி சண்டையும் போட்டு கொண்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நெட்டிசன்கள் இவரை மோசமாக விமர்சனம் செய்தனர். ஆனால் அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை பார்த்து வருகிறார்.
உச்சகட்ட கவர்ச்சியால் இளசுகள் ஷாக்
மகேஸ்வரி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.