Connect with us

உலக வரைபடத்தில் இல்லாத நாட்டிற்கு பிரதமரை அறிவித்த நித்தியானந்தா..! அட இந்த பிரபல நடிகையா.?

Untitled Project 76 1

தமிழ் நியூஸ்

உலக வரைபடத்தில் இல்லாத நாட்டிற்கு பிரதமரை அறிவித்த நித்தியானந்தா..! அட இந்த பிரபல நடிகையா.?

நித்தியானந்தா

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா¸ தனது தியான பீடத்தை கனடா உள்பட 50 நாடுகளில் நிறுவியுள்ளார். இதன் தலைமை இடம் பெங்களுருவில் உள்ள பிடதியில் உள்ளது. தன் மீது உள்ள வழக்கு மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறிய அவர் தென் அமெரிக்கா பகுதியில் தனி தீவை விலைக்கு வாங்கி கைலாசா எனும் நாட்டை நிறுவி உள்ளதாக கூறப்படுகிறது.

nithyananda 93966569

2010ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கர்நாடக அமர்வு நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை அதே ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறப்பித்தது. மேலும், பெங்களூருவை சேர்ந்த இரு பெண்களை ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா கடத்தி சென்றுவிட்டதாகவும் குஜராத் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, சர்வதேச போலீசாகிய இன்டர்போல் நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

nithayandha ranjitha cinemapettai 01

vijaya5 1

இல்லாத நாட்டில் பதவி அளித்த நித்தியானந்தா

இந்த நிலையில் கைலாசா நாட்டின் ‘லிங்க்டு இன்’ இணையதள பக்கத்தில் ரஞ்சிதாவின் பெயர் ‘நித்யானந்த மாயி சுவாமி’ என்றும், அவர் கைலாசா நாட்டின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. எங்கிருக்கிறது என்றே தெரியாத ஒரு நாட்டிற்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் எல்லாம் ஓவராக இருக்கும் நிலையில், அந்த நாட்டிற்கு அதிபர், பிரதமர் எல்லாம் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

1374394 ranjtha33

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top