நடிகர் கரண்
1967ம் ஆண்டு பிறந்த நடிகர் கரண் தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படம் ஒன்றில் அறிமுகமானார், இதனை தொடர்ந்து தனது 5 வயதில் இருந்து 15 வயது வரை சுமார் 44 படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த கரண் அதில் ஒரு படம் தமிழ் மொழியிலும் மற்ற அணைத்து படங்களும் மலையாள மொழியில் நடித்திருந்தார், பின் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய கரண் கல்லூரி படிப்பை முடித்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினர்.
மலையாள படங்களில் குணச்சித்திர மற்றும் துணை நடிகராக நடித்து வந்த கரண் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார், இதன் பின்பு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் . தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் விக்ரம் பதில் நடிகர் கரண் நடிக்க இருந்ததாகவும் ஆனால் சில காரணகளால் அந்த படத்தில் கரண் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
வயதுக்கு மீறிய உறவால் சினிமாவை விட்டு விலகினாரா
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செய்யாறு பாலு , கரண் சினிமாவில் இளம் நடிகராக இருந்த போது ஆண்ட்டி வயதான பெண்ணின் கட்டுப்பாட்டில் இருந்தாக தகவல் வெளியானது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது என்றும் சொல்லப்பட்டது ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.