பொம்மாலி ரவி சங்கர்
விஜய் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டைக்காரன். அனுஷ்கா, சலீம் கோஸ், டெல்லி கணேஷ், ஶ்ரீ ஹரி உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரவிஷங்கர். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கண்ணடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். வர் பல நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார் என்பது தான் பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.
தமிழ் தெலுங்கு மட்டுமல்ல இவர் ஹாலிவுட் படங்களுக்கு கூட டப்பிங் கொடுத்துள்ளார். இவர் 1995 ஆம் ஆண்டு வெளியான ஜுராஸிக் பார்க்கின் தமிழ் வெர்ஷனில் நடிகர் ரவிசங்கர் ஜுராசிக் பார்க் படத்தில் நடித்த Jeff Goldblum நடிகருக்கு டப்பிங் கொடுத்திருந்தார். அதேபோல தூள் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் மற்றும் அரசியல்வாதியாக வரும் ஷாயாஜி ஷிண்டே இருவருக்கும் டப்பிங் கொடுத்திருந்தார்.
வேட்டைக்காரன் படவில்லனின் மனைவி யார் தெரியுமா.?
2002 இல் கன்னடத் திரைப்படமான துர்கி மூலம் இயக்குநராக அறிமுகமானார். 75 க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களுக்கும் 150 தமிழ் படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். இப்படி பல துறைகளில் தன் திறமையை காட்டி வரும் இவரின் குடும்ப புகைப்படங்களை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை தற்போது அந்த குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.