தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். ஏன் சொல்ல போனால் வசூலில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து உலக சாதனை படைத்து வந்தது.
அந்த வகையில் பாகுபலி 2 திரைப்படமும், இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படமும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனாலயே இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி நடிக்க களமிறங்கி இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல மொபைல் போன் நிறுவனமான ‘OPPO’ நிறுவனத்தின் விளம்பர தூதராக இயக்குனர் ராஜமௌலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ‘OPPO’ மொபைல் விளம்பரம் ஒன்றிலும் நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.