நடிகை குஷ்பு
தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார்.
அப்பொழுது ரசிகர்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டி கொண்டாடிய ரசிகர்களும் உண்டு அந்த அளவு குஷ்புவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த குஷ்பு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். பின்பு ஒரு காலகட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள்.
நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த போட்டோவை நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், தனக்கு இடுப்பு எலும்புக்காக மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், விரைவில் முழுமையாக குணமடைவேன் என்று நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு குஷ்பு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.