தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார். ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூட சஞ்சய்காக கதை எழுதி படம் இயக்கவிருந்தார். ஆனால், சஞ்சய் தற்போது தனக்கு இன்டர்ஸ்ட் இல்லை என்று கூறியதாக விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
வைரலாகும் வீடியோ
தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடலுக்கு காருக்குள் தனது ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் விஜய்யின் மகன் சஞ்சய் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.