நடிகர் விஜய்
மக்களால் போற்றப்படும் விஜய் அவர்கள் 22 ஜூன் 1974 இல் பிறந்தார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ஆவார். இவர் 65 படங்களுக்கும் மேல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் 1992 ஆம் ஆண்டு “நாளையா தீர்ப்பு” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்.
சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள்.
40 வயது நடிகையுடன் 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான விஜய்
அரசியலில் முழுமூச்சாய் ஈடுபடுவதினாலும் “லியோ” படத்தில் நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக இருப்பதை வைத்து பலர் பலவிதமான கட்டுக்கதைகளை கூறி வந்துள்ளனர். இதெல்லாம் தாண்டி ஒரு படி மேல் விஜய் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு பத்திரிகையாளர் கூறியது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.