காமெடியன் ஜனாகராஜ்
1955ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தேனாம்பெட் வடிவேலு முத்துலட்சுமி என்ற தம்பதியருக்கு பிறந்தவர் பக்க சென்னை வாசியான ஜனகராஜ் கல்லூரி நாட்களில் செரியாக படிக்கமாட்டாராம் அவர் சுற்றி உள்ளவர் எல்லாருமே சினிமா துறை சேர்ந்தவர்கள். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு அனைவரையும் மயக்கி விடுவார்.
ஜனகராஜின் வீடு சென்னையில் ஒரு முக்கியமான மெயின் ரோட்டில் பெரிய வீடாக இருந்தது. பல சினிமா பிரபலங்கள் ஜனாகராஜ் வீட்டில் தான் வாடகைக்கு தங்கி இருந்தார்கள். மலேசியா வாசுதேவனும் அவர் வீட்டில் தங்கி இருந்தார். அதன் பின்னர் மூன்று நாடகத்தில் நடித்தேன், 1978ல் பாரதிராஜா என்னை கொண்டு வந்து கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் எப்படி காமெடியன் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. ஜனகராஜ் தமிழில் மட்டும் 200+ படங்கள் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார்.
தற்போதைய நிலைமை
திடீரென இவர் முகவாதத்தினால் அவதிப்பட்டார். அதற்கு கரண்ட் வைத்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்ததால் அவருக்கு நரம்பு பிரச்சனை,மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தன் மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார். கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.