மிர்ச்சி வானொலியின் ஆர்ஜேவாக பணியாற்றி பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.
அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக கேரள நடிகை ஸ்ரீஜா நடித்து மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்களிடம் இருந்து பெற்றார்.மிகவும் சாதுர்யமான நடிப்பால் மக்கள் மனதை மிகவும் கவர்ந்தார் ஸ்ரீஜா.
ரீல் ஜோடிகளாக இருந்த செந்தில் – ஸ்ரீஜா குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2014ல் காதலித்து திருமணம் செய்து ரியல் ஜோடிகளாக மாறினார்கள்.திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதை செந்தில் வெளியிட்டார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சீரியல் நடித்த ஸ்ரீஜாவை நம்பி ஏமாந்துட்டேன். ரியல் வாழ்க்கையில் ஸ்ரீஜா வேற.நிஜவாழ்க்கையில் அவர் ரொம்ப ஸ்டிரிட்டான மனைவி என்றும் பல இடங்களில் ஈகோ ஆரம்பித்து சண்டையில் கூட முடிந்ததாகவும் கூறியுள்ளார்.
வெகு வருடங்கள் கழித்து தற்போதுதான் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது செந்திலும் ஸ்ரீஜாவும் சென்னையில் தங்களது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.