சினிமா மூலம் பிரபலம் ஆனவர்களை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் என பல நிகழ்ச்சிகள் இதற்கு உதாரணம்.
இதில் சூப்பர் சிங்கர் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி.இதுவரை 8 சீசன்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு தடவையும் யாரோ ஒருவரையாவது பிரபலமாக்கிவிடும்.
அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள சூப்பர் சிங்கர் 9ன் ஃபைனலிஸ்ட் கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் பூஜாவும் பைனல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பூஜா, புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவரின் புகைப்படத்திற்கு ரசிகர்கள், சூப்பர் சிங்கர் பூஜா சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்.