அர்ச்சனா
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருந்தவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அவர் பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அர்ச்சனா தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அர்ச்சனாவின் மகள் சாரா. அவரும் தனது அம்மாவுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அர்ச்சனா மாகாபாவுடன் இணைந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிலையில் வி.ஜே அர்ச்சனா இளம் வயதிலேயே ஏன் கவர்ச்சியான உடைகளை அணியவில்லை என்பது குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த பொழுது ஸ்லீவ்லஸ் உடைகளை அணிந்து கொண்டுதான் நடித்திருக்கிறேன்.
அப்போதைய சமயங்களில் ஸீல்வ்லஸ் உடைகளை அணிவது தவறு என்று எனக்கு தெரிந்தது. அதற்கே நிறைய நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்தது அதற்கு பிறகு எனக்கு திருமணம் ஆன பிறகு ஸ்லீவ்லஸ் உடையையே நான் அணியவில்லை. அப்போதைய காலகட்டத்தில் அது மிகப்பெரும் தவறாக இருந்தது.
மேலும் இந்த மாதிரியான கவர்ச்சி உடைகளை அணிந்திருந்தாலே எங்களை தவறான போக்கில் பார்க்க துவங்கினார்கள். அதனாலேயே நான் அதை போடவில்லை என்று வெளிப்படையாகவே இந்த விஷயத்தை கூறியிருக்கிறார் வி.ஜே அர்ச்சனா.