நடிகை ஸ்ரீதேவி அசோக்
நடிகை ஸ்ரீதேவி அசோக், கிழக்கு கடற்கரை சாலை, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நெடுந்தொடர்களில் களமிறங்கி அசத்தி வருகிறார்.
செல்லமடி நீ எனக்கு என்ற நெடுந்தொடர் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி, தற்போது விஜய் தொலைக்காட்சியில் பொன்னி தொடரில் நடித்து வருகின்றார்.
இவருக்கு கடந்த 2022 ஆம் வருடம் அசோக் என்பவருடன் திருமணம் நடந்தது. சமீபத்தில் தான் இவர் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சில போட்டோ ஷூட்களை வெளியிட்டார். இதன் காரணமாக, அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கர்ப்பமான வயிற்றில் கவுன்டிங்:
சீரியல்களில் நடித்து நடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் தனது குடும்பமே முக்கியம் என அவர்களோடு முழு நேரத்தை செலவிடுவார். இதனாலே ஸ்ரீதேவிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.
ஸ்ரீதேவி அவ்வப்போது தனது குடும்பத்தோடு இருக்கும் அழகான புகைப்படங்களையும் தனது மகளின் கியூட்டான வீடியோ புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது நாட்களை எண்ணும் விதமாக கர்ப்பமான வயிற்றில் மாத நாட்காட்டி ஒன்றை வரைந்து ஒவ்வொரு நாளாக எண்ணுவது போன்ற புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி அஷோக்கின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருவது குறிப்பிடுத்தக்கது.