கீர்த்தி பாண்டியன்
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக விரைவில் வலம்வர இருப்பவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த 2019 ஆம் வருடம் வெளியான தும்பா திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமானார். தும்பா படத்திற்கு பின்னர் அன்பிற்கினியாள் படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி அருண் பாண்டியனின் மகள் ஆவார். நடிகை ரம்யா பாண்டியனின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் காஞ்சனா 3, அயோக்யா, மாநாடு படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள கண்ணகி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி பாண்டியனின் திருமணம் திருநெல்வேலியில் வைத்து நடைபெற்று உள்ளது. தனது தந்தைக்கும், தங்கையின் கணவருக்கும் வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
மாட்டுப்பண்ணை
மேலும் இவர் சொந்த கிராமத்தில் விவசாயமும் செய்து வருகிறார்,மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். தற்போது இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.