நடிகர் மௌலி
தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்களில் நடிகர் மௌலியும் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இயல்பாகவே இவர் ஒரு இயக்குனரும் ஆவார். இவரின் திறமைக்காக பல விருதுகளை பெற்றவர் மௌலி.
நடிகர் கமலுக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட. இவர் பல படங்களில் கதையாசிரியராகவும் இருந்திருக்கிறார். இவர் இயக்கிய படங்களில் பம்மல் கே சம்பந்தம், நளதமயந்தி போன்ற படங்கள் வெற்றித்திரைப்படங்களாக அமைந்தன.
70களிலேயே சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே 20க்கும் மேற்பட்ட கதைகளை எழுதி வைத்திருந்தாராம். முதலில் ஒரு அமெரிக்கன் கம்பெனியில் வேலையில் இருந்திருக்கிறார் மௌலி. இவருக்கு தெரிந்தவர்கள் சிலர் இவரிடம் உள்ள கதைகளை அறிந்து கதையாசிரியராக சினிமாவிற்கு வரலாமே என்று ஆலோசனை கூறியிருக்கின்றனர்.
புகைப்படம்
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மவுலியின் மகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் மவுலியின் மகளா இது.? என ஆச்சரியத்தில் திகழ்ந்துள்ளனர்.