நடிகர் ஸ்ரீகுமார்
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசையமைப்பாளரான ஷங்கர் கணேஷின் மகனாவார். ஆனந்தம் சீரியலில் நடிக்கத்துவங்கிய ஸ்ரீகுமார் அதன் பின் சன் டிவியில் பல சீரியலில் நடித்துவருகிறார்.
அஹல்யா, பந்தம், பொம்மலாட்டம், யாரடி மோஹினி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலில் மட்டுமல்லாது பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெற்றுளார் ஸ்ரீகுமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன், கலைஞர் டிவியில் மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
அதன் பின் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ரீகுமார். தற்போது ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வானத்தைப்போல போன்ற சீரியல்களில் நடித்துவருகிறார்.
போட்டோக்கள்
சன் டிவியில் 2008 முதல் 2009 வரை ஒளிபரப்பான சிவசக்தி சீரியலின் போது ஷமிதாவை ஸ்ரீகுமார் சந்தித்தார். இந்த சீரியலில் சிவசக்தி என்ற டைட்டில் கேரக்டரில் ஷமிதாவும், கண்ணன் கேரக்டரில் ஸ்ரீகுமாரும் நடித்துள்ளனர்.
இருவரும் சீரியலில் தங்கள் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஒருவரையொருவர் காதலித்து 2009 இல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.