தமன்னா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் ‘கேடி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அயன் பாகுபலி, கண்டேன் சீதையை, ஆனந்த தாண்டவம், பையா போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். அதன் பிறகு தமிழில் மார்க்கெட் சரிய தொடங்கியதால் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மராத்தி என பிறமொழி படங்களில் நடித்து வந்தார். மேலும் மாடலிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
கவர்ச்சி போட்டோஸ்
2005 ஆம் ஆண்டில், அவர் அபிஜீத் சாவந்தின் வீடியோ ஆல்பமான “லஃப்ஸோ மெய்ன்” ஆல்பமான ‘ஆப்கா அபிஜீத்’ பாடலிலும் தோன்றினார். தற்போது அவரது இளமைக்கால போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.