மோனிகா
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில், முன்னணி கதாநாயகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அதனை தொடர்ந்து அவர் பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை மோனிகா காதல் அழிவதில்லை, பகவதி, பந்தா பரமசிவம், சண்டக்கோழி, தாஸ், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி, சிலந்தி, அ,ஆ,இ,ஈ, ஜன்னல் ஓரம் என ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் அவர் தனது பெயரை எம் ஜி ரஹீமா என மாற்றிக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவர் வெளியில் செல்லும்போது ரசிகர்கள் மத்தியில் சிரமமாக இருப்பதாக கூறி பர்தா அணியதொடங்கினார்.
போட்டோக்கள்
பின்னர் நடிகை மோனிகா வருடங்களுக்கு முன்பு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா துறையிலிருந்து முழுவதும் தன்னை விலக்கிக் கொண்டார். தற்போதும் அவரது கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.