Connect with us

இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவியை செய்யும் பாலா..! லொள்ளு சபா நடிகரின் வீடியோவை கண்ட அடுத்த நொடியே நேரில் சென்று உதவிய பாலா..!

kpy bala venkat raja 1 1

சினிமா செய்திகள்

இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவியை செய்யும் பாலா..! லொள்ளு சபா நடிகரின் வீடியோவை கண்ட அடுத்த நொடியே நேரில் சென்று உதவிய பாலா..!

kpy பாலா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார்? நிகழ்ச்சியின் மூலமாக தனது நகைச்சுவை பாணியால் தமிழக மக்களிடையே நன்கு பரிட்சயமானவர் பாலா. அதனைத்தொடர்ந்து, அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

KPY Bala 1

காமெடியால் மட்டும் ஒருவரை சிரிக்க வைக்காமல், தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர் சாதனை பெட்டியை கூட, ஒரு ஆதாரவற்றோர் இல்லத்திற்கு தான் வழங்கினார். அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.

27be29e5 2b2b 43c9 ba3b 3d9ac87e4a7c

தன்னுடைய தேவைக்கு அதிகமான பணத்தை சேர்த்து வைப்பதை விட அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்திருக்கும் பாலாவின், தங்கமான மனசுக்கு தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது மட்டும் இன்றி, விஜய் டிவி-யில் தொகுப்பாளராக கலக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

b2acef1f 7a0c 4eb5 bb2a ba51db433d53

உதவிய பாலா

விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சி பலரை தூக்கிவிட்டுள்ளது. பலருக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்துள்ளது. நடிகர் சந்தானம், மனோகர் போன்ற பலரும் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவிற்கு வந்தவர்கள்தான். அதே லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமாக இருந்த மற்றொரு நடிகர் வெங்கட் ராஜ்.

KPY Bala4

அவர் பேசும்போது கடந்த சில காலங்களாக மூச்சு திணறல் காரணமாக கடும் அவதிகளை சந்தித்து வருகிறேன். மருந்து வாங்க கூட காசு இல்லை. யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இதை அறிந்த பாலா உடனடியாக அவரை சந்தித்து அவருக்கு 9000 ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

KPY Bala3

KPY Bala2

KPY Bala1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top