நடிகர் வினித்
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என்று பல இந்திய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகர் வினீத் மிகப்பெரிய பரதநாட்டிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் படங்களில் இவர் நடிப்பதில்லை.
சிறு வயது முதலே பரதநாட்டியத்தில் பெரும் ஆர்வம் கொண்ட நடிகர் வினீத், கேரளாவின் தலைசேரியில் பிறந்தவர். 1985 ஆம் ஆண்டு முதல் மலையாள மொழியில் நடித்து வரும் வினீத் அவர்கள் முதல் முறையாக கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான பரதனின் “ஆவாரம்பூ” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதைப் பெற்ற இவர், அதன் பிறகு புதிய முகம், ஜென்டில்மேன், மே மாதம், காதல் தேசம் என்று தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக மாறினார் என்றால் அது மிகையல்ல. 90களின் துவக்கத்தில் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெண் ரசிகர்கள் இருந்தனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தே வருகிறார்.
மனைவி யார் தெரியுமா.?
இவருக்கு 53 வயதாகும் நடிகர் வினித் இன்னும் இளமையாகவே இருப்பது ரசிகர்களை அ திர்ச்சியாகியுள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்.