பாலா
சிவகார்த்திகேயன், சந்தானம், குக் வித் கோமாளி புகழ், தீனா இதுபோன்ற சினிமா பின்னணி இல்லாத பலர் இன்று தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்க முக்கிய காரணங்களில் ஒன்று விஜய் டிவி. திறமையான நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான ஒரு மேடையை உருவாக்கி இன்று அவர்களை வாழவைத்து வருகிறது விஜய் டிவி.
இப்படி விஜய் டிவி மூலம் உருவான பல்வேறு கலைஞர்களில் ஒருவர்தான் கலக்கப்போவது யாரு புகழ் பாலா. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாலா, பல்வேறு கேலி பேச்சுக்கள், கஷ்டங்கள் இவற்றையெல்லாம் தாண்டி இன்று புகழின் உச்சத்தில் உள்ளார்.
குறிப்பாக தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மனதில் நிறத்தமான இடத்தை சம்பாதித்து தந்துள்ளது.
விஜய் டிவியின் பிரபல அறந்தாங்கி நிஷா ஆயிரம் பேருக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்த வரிசையில் விஜய் டி.வி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா நிதியுதவி வழங்கியுள்ளார்.
பெருமை படணும்
அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் கொடுத்து உதவி இருந்தார் பாலா . இப்படி ஊருக்கே அள்ளிக் கொடுத்த பாலாவின் குடும்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…