மன்சூர் அலி கான்
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் இருந்து தற்போது வரை, பல வில்லன் நடிகர்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். அவர்களில் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
அந்த வகையில், 90களில் தன் மிரட்டலான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தவர் மன்சூர் அலிகான். மும்பையில் அனுபம் கெரின் நடிப்பு மும்பை பள்ளியில் தனது பயிற்சியை பெற்ற மன்சூர் அலிகான், விஜயகாந்த் நடித்த “கேப்டன் பிரபாகரன்” படத்தில், மிரட்டலாக நடித்து, கவனத்தைக் கவர்ந்தார்.
ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்து வந்த மன்சூர் அலிகான், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
படையப்பா போன்ற சில படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். தற்போது அவரது குடும்ப போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.