தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. அவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அவர் விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்குகிறார்.
பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். யார் எவ்வளவு கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் ப்ரியங்கா தனது கணவர் குறித்து பெருமளவில் பேசியதில்லை. அவர் எப்பொழுதுமே தனது அம்மா மற்றும் தம்பி குறித்தே அதிகம் பகிர்வார்.
போட்டோ
அவர் மார்ச் 5, 2018 அன்று தனது இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார், மேலும் அவரது ஆங்கரிங் திறன்களை விரும்பும் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.