நடிகை நளினி
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். 1980களில் தமிழ் சினிமாவில் கலக்கியவர் இவர் தான். இவரது கரகாட்டக்காரனை யாராவது மறக்க முடியுமா? இவர் படங்களில் எவ்வித ஆபாசமான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெறாது என்பதால் தாய்க்குலங்கள் இவரது படத்தைக் காண ஆவலுடன் திரையரங்கிற்கு வருவார்கள்.
இவர் கிராமத்து பின்னணி கொண்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்த வந்த ராமராஜன், அதிமுக பற்றாளரும் ஆவார். இவரது கரகாட்டக்காரன் திரைப்படம் இன்றளவும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
ராமராஜன் நடிகை நளினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்திற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி. இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளது.
லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்
தற்போது நளினி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.