சிபி சத்யராஜ்
80, 90 காலகட்டத்தில் வில்லனாக, ஹீரோவாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். மேலும் மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிபிராஜ் பல வித்தியாசமான கதைக்களத்தில், காதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் அவர் தனது தந்தையுடன் இணைந்தும் சில படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் சிபிராஜ் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர்.
கிரஹப்பிரவேசம்
இந்த நிலையில் சிபிராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது சிபிராஜ் சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டியுள்ளார். மேலும் குடும்பத்துடன் வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.