Connect with us

இளம் நடிகையுடன் நடிகர் சிம்பு திருமணம்..? உண்மையை உடைத்து சொன்ன நடிகை.! அப்போ இது உண்மைதானா.?

simbu marrige 1

சினிமா கிசுகிசு

இளம் நடிகையுடன் நடிகர் சிம்பு திருமணம்..? உண்மையை உடைத்து சொன்ன நடிகை.! அப்போ இது உண்மைதானா.?

சிம்பு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது கியூட்டான, அசத்தலாக நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சிம்பு. பின் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Simbu with beard look

ஆனால் உடல் எடை கூடியநிலையில் இடையில் சில காலங்கள் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியையே தழுவியது. பின் கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்த அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.

simbu look

இந்த படம்   விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் செம ஹிட்டானது.  இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.  இந்த நிலையில், சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

simbu

அப்போ இது உண்மைதானா ..?

இந்த நிலையில் சிம்பு அவர்களுடன் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தவர் தான் சித்தி இத்னானி இந்த படத்தின் மூலமாக தான் இவர் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், சிம்புவும் நீங்களும் காதலிக்கிறீர்கள் என தகவல் பரவுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர்

simbu movie actress

கிசுகிசு பத்தியெல்லாம் நாம் ரொம்ப யோசிக்க கூடாது. சினிமாவுக் குள்ளே வந்துட்டாலே வித்தியாசமா பேசத்தான் செய்வார்கள். நிறைய விஷயம் நம்ம பத்தி நல்லதா வரும். சில விஷயங்கள் திடீர்னு தப்பா வந்துடும்.

sithi ithani

அதுல உண்மை இல்லாட்டியும் அத நம்ப ஆரம்பிச்சுடுவாங்க. என்ன இந்த கிசு கிசுவெல்லாம் படிக்க நல்லா இருக்கும். அவ்வளவுதான். இதை யெல்லாம் ரொம்ப மைண்ட்ல ஏத்திடக் கூடாது. நம்ம வேலையை பாத்து போய்க்கிட்டே இருக்கணும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top