நயன்தாரா
மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவரை உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஏகோபித்த ஆதரவை பெற்று விட்டு இன்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்.
முதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
நடிகை திரிஷா
தமிழில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதனைத் தொடர்ந்து அவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின்னர் திரிஷா ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம் வந்தார்.
இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த அவர் இடையில் சில காலங்கள் மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். பின்னர் 96 படத்தின் மூலம் அசத்தல் கம்பேக் கொடுத்த திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்தார்.
ஹீரோ யாருன்னு பாருங்க
ஜவான் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தழுவி இருக்கிறார். இதனை அடுத்து நயன்தாரா மண்ணாங்கட்டி, அன்னபூரணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருவரும் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் ஒரு படத்தில் கூட இது வரை இணைந்து பணியாற்றியதாக கூற முடியாது. இனி இவரும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் முதன் முறையாக திரிஷாவும், நயன்தாராவும் இணைந்து ஒரே படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
அதுவும் எந்த கதாநாயகனுடன் தெரியுமா? உலக நாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கும் கேஎச் 234 படத்தில்தான் இந்த இரண்டு நடிகைகளும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.