சுனையானா
1995 ஆம் ஆண்டு கொடி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் அம்மன் இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன். ரமி ரெடி, கல்லு சிதம்பரம், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் தான் அருந்ததி திரைப்படத்தை இயக்கினார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த திரைப்படத்தை இப்பொழுது கூட டிவியில் ஒளிபரப்பினால் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான திரைப்படம்.
படத்தில் ஜண்டா என்ற வில்லன் கதாபாத்திரம் தான் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது, இந்த நிலையில் இத்திரைப்படத்தில் குட்டி அம்மனாக நடித்தவர் சுனைனா, இவருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. அந்த திரைப்படத்தில் குட்டி குழந்தையாக நடித்து இருந்தார் ஆனால் தற்போது இவர் வளர்ந்து பெரிய பெண்ணாக உள்ளார். தற்போது ப்ரெஷ் ரேடார் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் இவரிடம் கேட்டபோது நான் மீண்டும் படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும் ஓ பேபி படத்தில் நடித்தது கூட கட்டாயத்தின் பேரில் தான்.
ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
எனக்கு நீண்ட காலம் கழித்தே குழந்தை பிறந்தது எனவே நான் எனது குழந்தையை கவனிப்பதில் நேரத்தை செலவிடுவதையே மகிழ்ச்சியாக நினைக்கிறேன். இருந்த போதிலும் வெப் சீரிஸ் ஒன்றும் நடத்தி வருகிறேன்.இதற்குமேல் படங்களில் நடிப்பது என்பது முடியாத ஒன்று.
என்னுடைய முன்னேற்றத்திற்கு எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது தன் கணவர் தான் என கூறியுள்ளார்.அம்மன் திரைப்படத்தில் குட்டி பவானியாக வந்த சுனைனா தற்போது தனது கணவர் மட்டும் குழந்தையுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.