தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் நடிக்க வந்து போது இதெல்லாம் ஒரு மூஞ்சி இவன் ஹீரோவா என பலரும் கிண்டலும், கேளியும் பண்ணினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க படிப்படியாக தனது திறமையை வளர்த்து வெற்றி படங்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பொல்லாதவன்,
ஆடுகளம், அசுரன் என பல வெற்றி படங்களை கொடுத்து பெயரையும் புகழையும் சம்பாதித்தார் இப்படிப்பட்ட தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி படம் 100 கோடி வசூல் அள்ளியது. அடுத்தாக அருண் மாதேஸ்வரன் உடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்து பெரிய அளவில் வைரலானது இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50 வது படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை அவரே இயக்கி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் படத்தை மிகப் பிரமாண்ட பொருட்டுச் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
அதிர்ந்த ரசிகர்கள்
தனுஷ் சிறந்த நடிகர் மற்றும் அன்று ஒரு திறமையான பாடகரம் கூட இவர் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார் அது ஒரு பாடகர்களின் நிகழ்ச்சியாகும் அங்கு ஸ்வேதா மோகன் அவர்களும் பங்கு பெற்றிருந்தார் இவர்கள் இருவரும் இணைந்து காதல் ஓவியம் பாடலை பாடினார்கள்
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டுள்ளது இது தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகன் அவர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் இசை விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது