இளையராஜா
தமிழ் சினிமாவில் இசை மாமேதையாக இருப்பவர் இளையராஜா. இவரின் இசையின் வழியாக ரசிகர்களை கட்டி போடும் திறமை இவருக்கு அதிகமாகவே இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
70 தொடக்கங்களில் இருந்து இசையமைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா, சமீபத்தில் ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இளையராஜா வெளியேற்றம்
இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கருவறைக்கு முன் இருக்கும் அர்த்த மண்டபத்தில் அவர் நுழைந்தபோது, அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதனால் அந்த மண்டபத்தின் பாடியருகே நின்று கொண்டே அவர் கோயில் மரியாதையை பெற்றுக்கொண்டுள்ளார். தீவிர கடவுள் பக்தர், உலகளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இசைஞானியை இப்படி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.