தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீதிவ்யா அவர்கள். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். நடித்த முதல் படமே அனைவருக்கும் பிடித்த நடிகையாகவும் உலா வந்தார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்களுக்கு 2017 பின்பு எந்த ஒரு பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தார். பின்னர் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து தான் வெளியான ரெய்டு படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க இவர் மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து சில படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில் அவரின் க்யூட்டான புகைப்படங்கள் இதோ.
