தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90ஸ் காலகட்டங்களில் உலா வந்தவர் தான் நடிகை குஷ்பு அவர்கள். இவர் நடிக்காத நடிகர்கள் இல்லை என்று கூட கூறலாம். ஏனென்றால் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு உட்பட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை குஷ்பு அவர்கள். தற்போது தமிழ் சினிமாவில் குணசேத்திர ரோலில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். நடிகை குஷ்பு, நடிகை மீனா நெப்போலியன் மகனின் தனுஷின் திருமணத்தில் ஜப்பான்னிகு சென்று அங்கு எடுத்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்த நிலையில் கேரளாவில் நடந்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து சமீபத்தில் குஷ்பு அவர்கள் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது பெண்களுக்கு சினிமாவில் சந்திக்கும் சவால்கள் பிரச்சினைகள் குறித்து கேள்விகளுக்கு மட்டுமின்றி எங்கெல்லாம் பெண்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமா என்பதுனால இது அனைவருக்கும் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் யாரோ ஒருவர் தன்னை அவரிடம் தப்பாக நடந்து கொள்ள முயன்ற போது அவர் எந்த வெளிப்படையாக பேசும் முன் வரவேண்டும் இதில் சில பெண்களுக்கு எந்த உணர்வு அச்சம் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஒரு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு நடந்த மோசமான அனுபவத்தை நான் இங்கு பதிவு செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளர்.
ஒரு ஹீரோ தனியிடம் தவறான எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது அந்த நேரம் நான் பயப்படாமல் துணிந்து அந்த நடிகரை எச்சரித்தேன் என்று அவர் கூறியுள்ளார். அது மட்டுமே யார் இந்த நடிகர் என்று அவர் கூறியதால் யாராக இருக்கும் என்று தற்போது இணை வாசிகள் பலரும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.